Friday, March 30, 2007

மேலே வானம்...கீழே நியூ யார்க்...

மேலே வானம்...கீழே நியூயார்க்...

வானம்-1

*வேந்தன் ஐயா அவர்களுடன் உரையாடல்*


**
இன்று வேந்தன் அவர்கள் என்னுடன் அலைபேசியில் உரையாடினார்...


அவர், சங்க இலக்கியங்களைப் பற்றியும் வரலாற்றையும் பற்றி பேசினார்...
என்க்கோ நம்ம கேப்டன் ஸ்டைல்ல சொன்ன படிப்ல புடிக்காத ஒரே வார்த்தை வரலாறு...


வரலாறு ல 39 மார்க் வாங்கி, "அம்மா
, நான் பத்தாங்கிளாஸ் பாசாயிட்டேன்"னு குதிச்சவன்....


அப்றமா ட்ரெயினிங் ஆரம்பிச்சது... வேந்தன் ஐயா இன்னொரு முறை தொடர்பு கொள்வதாய்
சொன்னார்...


திரை கட்டிருந்தாங்க... லைட்டெல்லாம் ஆஃப் பண்ணினாங்க...


ஆஹா... பய புள்ளக சினிமா போடப்போறாங்க போல ன்னு ஒரே சந்தோசம்...! விசிலு
ஒன்னுதான் அடிக்கல...(ஏன்னா தெரியாது...)


Business Intelligence ன்னு டெட்டிலு போட்டாங்க...


சரி இங்கிலீஷு ப்டமாக்கும் னு நெனச்சேன்...


அப்றமாத்தான் தெரியுது... அதத்தான் நடத்தப்போறாங்கன்னு....


கொஞ்ச நேரத்ல தூக்கம் வந்துச்சு....


பழைய ஞாபகம் வந்துச்சு....


சென்னை ஐ.ஐ.டி யில் ராம்குமார் ராம்குமார் னு ஒரு வாத்தியார். அவர்தான்
எங்களுக்கு DSM (Data Structure & Manipulation ) னு ஒரு பேப்பருக்கு அந்த
செமஸ்டர் முழுசுமா தாலாட்டிப் பாடினார்...


அவர் கிளாசுக்குள்ள வர்ரப்ப ரொம்ப உற்சாகமா இருப்பேன்...
கிளாஸ் முடிஞ்ச உடனே... அத விட 1000 மடங்கு உற்சாகமாயிடுவேன்...


என்ன ரகசியம்னா-


கிளாஸ் ஆரம்பிச்ச உடனே கொட்டாவி வரும்...
அப்றமா ஒரு பாட்டு வரும்...


கண்கள் எரிகின்றது...
தூக்கம் வருகின்றது...
பாடம் யார் கேட்பதோ...
பரீட்சை யார் எழுதுவதோ... ன்னு


ஜேசுதாஸ் உரிமைக்குரல்ல விழியே கதைஎழுதுன்னு பாடினதை எங்களுக்காக இப்டி
பாடிட்ருப்பார்....எப்பவுமே...(நான் சின்ன வயசுல்ருந்தே...!)


அப்றம் சுகமான கனவு வரும்... ஒரு சினிமா ஓடும்... கிளாசு முடியப்போறப்ப நம்ம
சிவா (என்னோட கிளாஸ்மேட் அண்டு பக்கத்து சீட்) எழுப்பி உடுவான்...


தூங்கினதால உற்சாகமாயிருக்கும்...


இங்கனயும் அப்டித்தான் கதை...


அவர் (வாத்தியார்) எதோ டேட்டாபேஸ், டேபிளு ன்னு சொல்லிக்கிட்ருந்தார்...


எனக்கொ அட நம்ம வீட்ல இருக்ற தேக்கு மர டேபிளப் பத்தி இவருக்கு எப்டி தெரியும்
னு ஒரே ஆச்சர்யம்...


On 12/16/06, Raveendran Krishnasamy wrote:




- Hide quoted text -
- Show quoted text -

> நண்பர்களே,,


> மேலே வானம்...கீழே நியூ யார்க் என்று ஒரு தொடர் எழுதலாமா ன்னு
> யோசிக்கிறேன்... அந்த கைசின்னம் மாதிரி தெனம் ஒரு அனுபவம்...


> நீங்க சொல்லுங்க... தாங்க முடியுமா...?


> கனாக்காலம் விரைவில் தொடர்கிறேன்... இந்த வாரம் பணி நிமித்தமாய் வெளியே
> இருக்கிறேன்...


> --
> அன்புடன்
> சக பயணி
> ரிஷி ரவீந்திரன்


> "நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்..."
> "நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கிறது......."
> "உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."



--
அன்புடன்
சக பயணி
ரிஷி ரவீந்திரன்

"நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்..."
"நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கிறது......."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."

No comments: